Home இந்தியா ”சிகரெட் விலை பன்மடங்கு உயர வாய்ப்பு!

”சிகரெட் விலை பன்மடங்கு உயர வாய்ப்பு!

சிகரெட் விலை பன்மடங்கு உயர்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. மூன்று மடங்கு வரை விலை உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மசோதாவின் படி சிகரெட் விலை உயர உள்ளது. மெல்லும் புகையிலைக்கான வரி மூன்று மடங்கு உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்காப் புகையிலைக்கான வரி 25%-இலிருந்து 40% ஆக உயர வாய்ப்பு உள்ளது. பலவகை கலந்த சிகரெட் புகையிலைக்கான வரி 60%-இலிருந்து 300% ஆக உயருகிறது. ஐந்து மடங்கு வரை வரி உயர்வதால், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ₹18-க்கு விற்கப்படும் சிகரெட் ₹72 ஆக உயர வாய்ப்பு உள்ளது. சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகைக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மெல்லும் புகையிலைப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் என தெரிகிறது. தற்போது ₹18-க்கு கிடைக்கும் ஒரு சிகரெட்டின் விலை ₹72 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

புதிய சட்ட திருத்தத்தால், ஒன்றிய அரசின் சட்ட மாற்றத்தின் காரணமாக சிகரெட் பொருட்களின் விலை உயருகிறது. அண்மையில் புகையிலைப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு அமலுக்கு வரவிருக்கிறது.