Home இந்தியா “AI உபயோகித்து தேர்வு மோசடி: ஹைதராபாத் இருவர் கைது!”

“AI உபயோகித்து தேர்வு மோசடி: ஹைதராபாத் இருவர் கைது!”

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், தேர்வு முறைகளிலும் அதை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்கலைக்கழக தேர்வு எழுதிய இருவர் சிக்கியுள்ளனர்.

தேர்வு மோசடி எப்படி நடந்தது? ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் அல்லாத துறையில் ஜூனியர் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

எழுத்துத் தேர்வு 21ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வில் ஹரியானாவை சேர்ந்த 30 வயது அணில்குமார் எழுத்துத் தேர்வுக்கு வந்தார்.

அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, அணில்குமார் பயன்படுத்திய ப்ளூடூத் ஹெட்செட் மீண்டும் மீண்டும் பீப் சத்தம் ஒலித்தது. இதனால் தேர்வு மையத்தில் உள்ள கண்காணிப்பாளர் அவரை சோதித்த போது, அவரது சட்டையில் இணைக்கப்பட்ட ஸ்கேனர் மற்றும் வயிற்றில் இணைக்கப்பட்ட மின்னணு சாதனங்கள் கண்டறியப்பட்டது.

அவர் தேர்வு தாளை ஸ்கேன் செய்து கழிப்பறைக்குச் சென்று, காதில் உள்ள ப்ளூடூத் ஹெட்செட் மூலம் பதில்களை கேட்டுக்கொண்டு தேர்வு எழுதிக் கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது.

அதன்பிறகு, மற்ற மாணவர்களையும் சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தனர். ஹரியானாவை சேர்ந்த சதீஷ் என்ற மற்றொரு இளைஞரும் அதே தேர்வு கூடத்தில் இதே போல தேர்வு எழுதி வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பல்கலைக்கழக பதிவாளர் தேவேஷ் நிகாமின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.