Home இந்தியா “செயற்கைக்கோள் எச்சரிக்கை: உடைந்தால் அலை மோதும் பனிப்பாறை ஏரிகள் – கோடிக்கணக்கான மக்கள் ஆபத்தில்!”

“செயற்கைக்கோள் எச்சரிக்கை: உடைந்தால் அலை மோதும் பனிப்பாறை ஏரிகள் – கோடிக்கணக்கான மக்கள் ஆபத்தில்!”

இமயமலையின் இந்திய பகுதியில் உள்ள 400க்கு மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலை அளிக்கிறது என்றும் இதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

பனிப்பாறை ஏரிகள் நீர்பிடிப்பு பகுதிகள் குறித்து ஜூன் மாத அறிக்கையை நீர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் ரடாக், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் 432 பனிப்பாறை ஏரிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது .

இந்திய நிலப்பரப்பில் உள்ள 681 பனிப்பாறை ஏரிகளில் 432ல் 2023ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு ஜூனில் அதிக நிலப்பரப்பில் நீர் தேங்கி விரிவடைந்துள்ளது எனவும் இது பேரிடரை ஏற்படுத்த கூடியதாகும் என்றும்

இதில் அருணாச்சல பிரதேசத்தில் அதிகபட்சமாக 197 பனிப்பாறை ஏரிகளும் லடாக்கில் 120 ஏரிகளும் ஜம்மு காஷ்மீரில் 57 ஏரிகளும் சிக்கிமில் 47 ஏரிகளும் இமாச்சல பிரதேசத்தில் ஆறு ஏரிகளும் உத்தரகாண்டில் ஐந்து ஏரிகளும் விரிவாக்கம் அடைந்துள்ளன எனவும்.

இமயமலை பகுதிகள் மொத்தம் 1435 பனிப்பாறை ஏரிகள் விரிவாக்கம் அடைந்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நவீன கண்காணிப்பு அமைப்புகளையும் செயற்கைக்கோள் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை தகவல்களையும் அங்கு வாழும் மக்களுக்கு பகிர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.