Home இந்தியா “கல்வி கற்பிக்க வேண்டிய இடத்தில் கொடுமை – மாணவிக்கு உயிர்காக்கும் சிகிச்சை”

“கல்வி கற்பிக்க வேண்டிய இடத்தில் கொடுமை – மாணவிக்கு உயிர்காக்கும் சிகிச்சை”

ஆந்திராவில் பள்ளி ஆசிரியர் ஆறாம் வகுப்பு சிறுமியை தாக்கியதில் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சித்தூர் மாவட்டம் புங்கனூர் கிராம பள்ளியில் படிக்கும் மாணவி செய்த ஏதோ ஒரு குறும்புக்காக அவளது தலையில் ஆசிரியர் டிபன் பாக்ஸால் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் சிறுமிக்கு கடும் தலைவலியும் மயக்கமும் ஏற்பட்டதால் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் சிறுமியின் மண்டை ஓட்டு எலும்பு உடைந்தது தெரிய வந்தது.

சிறுமி பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை விசாரித்து வருகின்றனர்.