மகாதேவ புராவை தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்த வாக்கு திருட்டை அம்பலப்படுத்துவோம் என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வாக்கு திருட்டை கண்டித்து பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். 13வது நாளில் சிவான் பகுதியில் யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி மக்கள் மத்தியில் பேசினார்.
அதானி அம்பானியுடன் பிரதமர் மோடி கூட்டு சேர்ந்து முதலில் வாக்குகளை திருடுவார் பின்னர் ரேஷன் கார்டை பெறுவார் பின்னர் நிலத்தை பறிப்பார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
வாக்கு திருட்டு என்பது அம்பேத்கரின் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று கூறிய அவர் அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்த நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
இதுவரை மகாதேவபுராவில் நடந்த திருட்டை அம்பலப்படுத்தியுள்ளோம். வரும் காலங்களில் நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்த வாக்கு திருட்டுகளை அம்பலப்படுத்துவோம் என ராகுல் காந்தி கூறினார்.








