Home இந்தியா “ஓசூரில் தாயால் ஐந்து மாதக் குழந்தை கொலை – இடையூராகப் பிறந்தது காரணமா?

“ஓசூரில் தாயால் ஐந்து மாதக் குழந்தை கொலை – இடையூராகப் பிறந்தது காரணமா?

ஓசூரில் தாயால் குழந்தை கொலை – இடையூராகப் பிறந்ததால் அதிர்ச்சிகர சம்பவம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஐந்து மாத ஆண் குழந்தையை தாயே கொன்று புதைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

உசுரடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி பாரதி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது.

இந்நிலையில், பாரதி மற்றும் எதிர்வீட்டில் வசிக்கும் சுமித்ரா ஆகியோருக்கு ஓரினச்சேர்க்கை தொடர்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உறவின் போது, குழந்தை இடையூராக இருப்பதாகவும், அதனால் குழந்தையை கொல்லுமாறு சுமித்ரா வாட்ஸ்அப் மூலம் பாரதியிடம் கூறியதாக போலீசார் கூறுகின்றனர்.

அந்த தகவலைப் பெற்ற பாரதி, யோசிக்காமல் குழந்தையை மூச்சு அடைத்து கொன்றுவிட்டதாகவும், பின்னர் பாலூட்டும் போது குழந்தை புரையேறி இறந்ததாக நாடகம் ஆடியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், உறவினர்கள் குழந்தையின் உடலை புதைத்து அடக்கம் செய்தனர். சில நாட்கள் கழித்து, சுரேஷுக்கு வீட்டில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் கிடைத்தது. அதில், பாரதி மற்றும் சுமித்ரா இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் குழந்தையை கொல்லுமாறு அனுப்பப்பட்ட குறுந்தகவல் இருந்தது.

இதையடுத்து சுரேஷ் கிளமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பாரதி மற்றும் சுமித்ராவை விசாரித்தபோது, அவர்கள் குழந்தையை கொலை செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில், தேன்கனிக்கோட்டை தாசில்தார் முன்னிலையில் மருத்துவக் குழுவினர் உடலை தோண்டி எடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.