Home தமிழகம் “திருச்செந்தூரில் 20 ஆண்டுகளாக கடலறிப்பு: மணல் மறைந்து பக்தர்கள் பாதிப்பு!”

“திருச்செந்தூரில் 20 ஆண்டுகளாக கடலறிப்பு: மணல் மறைந்து பக்தர்கள் பாதிப்பு!”

திருச்செந்தூரில் கடல் அடிக்கடி உள்வாங்குவதை கேள்விப்பட்டிருப்போம். ஏன் கடல் அடிக்கடி உள்வாங்குகிறது? கரைகளில் அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்? இதற்கான விளக்கம் உண்டு.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கிறார்கள். பக்தர்கள் கோவில் முன் கடலில் புனித நீராடி, அதன் பிறகு முருகனை தரிசிப்பது வழக்கம். திருச்செந்தூருக்கு வரும் பயணிகள் அதிக நேரத்தை கடற்கரை மணல் மற்றும் கடலில் செலவிடுகின்றனர்.

ஆனால் சமீப காலமாக, திருச்செந்தூர் கடல் அடிக்கடி உள்வாங்குவதும், கடலறிப்பு ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடலில் இறங்கும் படிக்கட்டு பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் நீளத்தில் கடலறிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரையில் இருந்த மணல்கள் அனைத்தும் காணாமல் போனன. அந்த இடத்தில் பக்தர்கள் கடலில் இறங்கி நீராட முடியாமல் இருக்கின்றனர்.

கடந்த வருடம் இதே காலகட்டங்களில் இதுபோல் கடலறிப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டு மாத காலம் கடலறிப்பு நடந்தது, கரையில் இருந்த மணல்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

இந்து குறித்த விஷயத்தை ஆய்வு செய்ய சென்னை ஐஐடி குழு வந்தது. ட்ரோன் மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு அதன் அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்தனர்.

எரோஷன் (Erosion) – இது கடலறிப்புக்கான முக்கிய காரணம். டெபாசிஷன் (Deposition) – மணல் புதிய இடங்களில் சிதறி சேரும் நிகழ்வு.

    திருச்செந்தூரில் கடலறிப்பு இன்று நேற்று நடந்த சம்பவம் அல்ல; இது கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பெருமணல், உவரி, கூடங்குளம், ஆலந்தலை போன்ற பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக கடலறிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காக தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது.

    மனப்பாடு மற்றும் திருச்செந்தூரில் பல நூறு ஆண்டுகளாக மணல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. கால மாற்றத்தினால் தற்போது கடலறிப்பு நிகழ்கிறது. காலநிலையால் கடல் மட்டம் ஒரு வருடத்திற்கு கொஞ்சம் கூடுகிறது. இதனால் கடலோட்டத்தின் அழுத்தம் அதிகரித்து, எரோஷன் நடக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இந்த இடங்களில் அதிக எரோஷன் நிகழ்ந்து வருகிறது.

    மனப்பாடு போன்ற இடங்களில் மணல் திட்டுகள் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் உள்ளனர். ஆலந்தோலையில் தூண்டில் வளைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் லாங் ஷோர் கரண்ட் (Longshore Current) உருவாகி, நீரோட்ட அலைகள் கடற்கரைக்கு எதிர் திசையில் பயணம் செய்யின்றன. அலைகள் கடற்கரைக்கு அடைந்த போது மணல்கள் திரும்பவும் கடற்கரை நோக்கி செல்லும்.

    இதுவே திருச்செந்தூரில் கடலறிப்புக்கும் எரோஷனுக்கும் முக்கிய காரணம். கடந்த 30 ஆண்டுகளாக மணல் தேக்கம் அதிகமாக இருப்பதால், மணல் திட்டுகள் அதிகமாகி, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் உள்ளனர்.