மத்திய பிரதேச மாநிலம் பன்னாவில் வைரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த பழங்குடியின பெண்ணுக்கு ஒரே நாளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று வைரங்கள் கிடைத்துள்ளன.
ராஜ்பூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் வினிதா கோன் குழுவாக சென்று வைரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் 1.48 கேரட் 20 சென்ட் மற்றும் 7 சென்ட் என மூன்று வைர கற்களை கண்டெடுத்தார். இந்த வைரங்கள் ஏலம் விடப்பட உள்ள நிலையில் ஏலத்தொகை பல லட்சம் ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








