இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்து குறிப்பாக இளைஞர்கள் மூலம் கலவரத்தை தூண்டி வருவதாக பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.
வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் சமீபத்தில் வெடித்த கலவரங்களின் பின்னணியில் வெளிநாட்டு கைகள் இருப்பது நிரூபிக்கப்பட்டதால் இந்தியாவிலும் இது மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக விரைவில் ஒரு புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் எனவும் அந்த சட்டத்தின் மூலம் நாட்டிற்கு எதிராக வெளிநாட்டு ஆதரவுடன் கிளர்ச்சி செய்யும் நபர்களின் பட்டம் பறிக்கப்படும் எனவும் அதிகார பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனையுடன் சேர்த்து அவர்கள் பெற்ற கல்வி பட்டமும் பறிக்கப்படும். இந்த நடவடிக்கை வெளிநாட்டு சக்திகளின் திட்டங்களை முறியடிக்க ஒரு வலுவான ஆயுதமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காரணம் பட்டம் பறிக்கப்படும்போது வேலைவாய்ப்புகள் மட்டுமல்ல சமூக மரியாதையும் வாழ்க்கை நிலையும் முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் யாரும் நாட்டிற்கு எதிராக செயல்பட தயங்குவார்கள் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை.
மேலும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி இளைஞர்களை தூண்டுவதே கலவரங்களின் அடிப்படை காரணம் எனவும் அத்தகைய செயல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
இதுவரை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடந்து வந்த தீய நோக்கங்கள் இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் அரசியல் களத்தில் கூட நாட்டின் சுயாட்சிக்கு எதிராக வெளிநாட்டு ஆதரவு பெற்று செயல்படுவோர் பெரிதும் தளர்ந்து போவார்கள்.
குறிப்பாக இந்தியாவில் உள்ள வெளிநாட்டு சக்திகளின் தாக்கம் குறைந்து இந்திய இளைஞர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதே நேரத்தில் கல்வி பட்டத்தை பறிக்கும் நடவடிக்கையானது வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை பாதையை முழுமையாக தடை செய்யும் என்பதால் இத்தகைய செயல்களில் ஈடுபட யாரும் முன்வர மாட்டார்கள்.
இதன் மூலம் நாட்டில் வெளிநாட்டு சக்திகள் செய்யும் மறைமுக தலையீடு முற்றிலும் முறியடிக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை தேச பாதுகாப்பு என்ற கோணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சட்டம் கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை பல மடங்கு உயர்த்தி எதிர்காலத்தில் வெளிநாட்டு கைகளின் தலையீட்டை முற்றிலும் தடுக்கும் வலுவான அடித்தளமாக அமையும்.
நீதிமன்றம் மூலம் நிறுவனம் செய்யப்பட்டு விரைவில் தீர்ப்பு கிடைக்கும் வகையில் சட்டத்தில் பிரிவுகளை உண்டாக்க இருப்பதாகவும் இதன் மூலம் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.








