Home இந்தியா “உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏமாற்றம் – நவம்பர் 14ல் டெல்லியில் போராட்டம்”

“உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏமாற்றம் – நவம்பர் 14ல் டெல்லியில் போராட்டம்”

வக்பு காப்போம் அரசியலமைப்பை காப்போம் என்ற இயக்கத்தின் சார்பில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 14ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா வக்பு திருத்த சட்டத்தின் சில பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதி மற்றும் அரசமைப்பு சட்டத்தை மீறக்கூடிய பல பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.

அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தினுடைய வக்பு காப்பாற்றுவோம் அரசமைப்பு சட்டத்தை காப்போம் என்ற அந்த இயக்கத்தின் சார்பாக தொடர் போராட்டங்களை நாங்க நடத்த திட்டமிட்டுருக்கிறோம். தமிழ்நாட்டிலும் அந்த போராட்டம் நடைபெறும்.

இதனுடைய முடிவுல நவம்பர் 16 ஆம் தேதி புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில ஒரு மிகப்பெரிய பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் முடிவு செய்துஉள்ளது

உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அரசமைப்பு சட்டத்தினுடைய விளிமையங்களுக்கு விரோதமாக அமைந்திருக்கக்கூடிய தீர்ப்பு ஆனால் இது ஒரு இடைக்கால தீர்ப்புதான். இறுதியான தீர்ப்பு வரும்போது அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் தர வேண்டும் .என்று கூறினார்,