Home இந்தியா வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு – மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு

வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு – மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு

நாட்டின் வரலாற்று சின்னங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், கோட்டைகள் மற்றும் பாரம்பரிய இடங்களை பராமரிக்கும் பணிகளில் தனியார் கார்ப்பரேட் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை அனுமதிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள சுமார் 3,200க்கு பாதுகாக்கப்பட்ட பராமரிப்பை இந்திய தொல்லியல் துறை மட்டுமே கையாண்டு வருகிறது. இதனால் பல திட்டங்கள் தாமதமாவதால் பொது ,தனியார் பங்கேற்பு மூலம் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்றும் அரசு நம்புகிறது.

எனவே இந்த திட்டத்தின்படி பதிவு செய்த தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்ட்கள் இனி நேரடியாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளலாம். தனியார் பங்களிப்பு இருந்தாலும் அனைத்து பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளும் இந்திய தொழியல் துறையின் முழுமையான மேற்பார்வையின் கீழ் மட்டுமே நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.