Home Uncategorized ”164 வருட வரலாற்றை எட்டிய தஞ்சை ரயில் நிலையம்”!

”164 வருட வரலாற்றை எட்டிய தஞ்சை ரயில் நிலையம்”!

தஞ்சை ரயில் நிலையம் இன்று ஒரு பிரதான ரயில் இணைப்பாக திகழ்ந்தாலும், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது நாகபட்னம்–திருச்சி மேயின் லைனில் உள்ள சாதாரண ஸ்டேஷனாக மட்டுமே இருந்தது.

ஆனால், பின்னர் உருவான புதிய ரயில் பாதைகள் மற்றும் இணைப்புகள் வளர்ச்சியால், தஞ்சை படிப்படியாக ஜங்ஷன் நிலையை அடைந்தது.

1861-ஆம் ஆண்டு Great Southern of India Railway (GSIR) நிறுவனம் உருவாக்கிய நாகபட்னம்–திருச்சிராப்பள்ளி ரயில் இணைப்பின் ஒரு பகுதியாக தஞ்சை முதன்முதலில் ரயில் வரைபடத்தில் பதிவு செய்யப்பட்டது.

125 கிலோமீட்டர் நீளமான அகல ரயில் பாதையுடன் அமைக்கப்பட்ட இந்த இணைப்பு, 1862-ஆம் ஆண்டு பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

பின்னர் 1874-ஆம் ஆண்டு South Indian Railway Company, GSIR நிறுவனத்தை முழுமையாகக் கையகப்படுத்தியது. இதன் பின்னர் தஞ்சை ரயில் நிலையத்தின் வளர்ச்சி புதிய திசையை நோக்கி பயணித்தது. பரந்த அகல ரயில் பாதை வலையமைப்பில் தஞ்சை ஒரு முக்கிய மையமாக உருவெடுத்தது.

ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில், நாகபட்னம் துறைமுகத்திலிருந்து திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுப்புற உள்நாட்டு பகுதிகளுக்கு பொருட்கள் அச்செல்லும் முக்கிய வாணிபப் பாதையாக தஞ்சை திகழ்ந்தது.

வாணிபப் பொருட்களோடு பயணிகளுக்கும் விரைவான, எளிமையான போக்குவரத்தை வழங்கிய இந்த ரயில் இணைப்பு, தென்னிந்திய வாணிப வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியது.

பிரிட்டிஷ் ஆட்சியில் தென்னிந்திய வாணிபத்தையும் பொருள் போக்குவரத்தையும் மேம்படுத்தவே ரயில்வே அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தப் பணியை GSIR தொடங்கி, பின்னர் South Indian Railway தொடர்ந்து முன்னெடுத்தது.

வரலாற்றுச் சிறப்பையும், தற்போதைய நவீன வசதிகளையும் ஒருங்கிணைத்து, தஞ்சை ரயில் நிலையம் இன்று தென் ரயில்வேயில் முக்கியக் கணுக்காலாக திகழ்ந்து வருகிறது.