Home உலகம் “சீனாவின் மலைகளைக் கடந்த அதிசய பாலம்: பயணம் வெறும் 2 நிமிடங்கள்”

“சீனாவின் மலைகளைக் கடந்த அதிசய பாலம்: பயணம் வெறும் 2 நிமிடங்கள்”

சீனாவின் குயிஷோ மாகாணத்தில் உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளதால் மக்களின் இரண்டு மணி நேர பயணம் இரண்டு நிமிடமானது. சீனாவின் தென்மேற்கில் உள்ள குயிஷோ மாகாணத்தில் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் என்ற பெயரில் உலகில் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் மேற்பரப்பிலிருந்து 2051 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் இரு மலைகளுக்கு இடையே 4658 அடி நீளத்தில் உள்ளது. ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் என்ற பெயர் பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே மிக உயரமான பாலம் என பெயர் பெற்ற பகுதியில் உள்ள பேப்பன்ஜயங் பாலத்தின் 1854 அடி உயரத்தை இந்த புதிய பாலம் முறியடித்துள்ளது.

இந்த புதிய பாலம் திறக்கப்பட்டதன் வாயிலாக இரு பகுதிகளுக்கு இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரத்தில் இருந்து இரண்டு நிமிடங்களாக குறைந்துள்ளதாக குயிஷோ மாகாணத்தின் போக்குவரத்துறை தலைவர் ஜான் கிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆயிரக்கணக்கான பாலங்களை கொண்ட குயிஷோ மாகாணத்தில் இப்போது உலகின் இரண்டு உயரமான பாலங்களை கொண்டு பெருமை அடைகிறது.