Home உலகம் “வெற்றி தினத்தில் பேசுபொருளான ‘மரியாதைக்குரிய’ சிறுமி – சீனாவில் முதன்முறையாக காட்சியளித்தவர்”

“வெற்றி தினத்தில் பேசுபொருளான ‘மரியாதைக்குரிய’ சிறுமி – சீனாவில் முதன்முறையாக காட்சியளித்தவர்”

இரண்டாம் உலக போரில் ஜப்பான் சரணடைந்த தினத்தை சீனா ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த வெற்றி தின பேரணியில் சீனா தனது ஆயுத அணிவகுப்பை நடத்தும்.

இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் வடகொரிய அதிபர் கிம்ஜாங்உன் உட்பட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்பதற்காக கிம்ஜாங்உன் தனது குண்டு துளைக்காத ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

நகரும் அரண்மனை என்று சொல்லும் அளவிற்கு ஆதி நவீன பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் இந்த ரயிலில் உள்ளன. 60 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும் இந்த ரயிலில் பயணித்து கிம்ஜாங்உன் சீனாவை சென்றடைந்தார்.

சீனாவிற்கு முதல் முறையாக கிம்ஜாங் தனது 12 வயது மகளை அழைத்துச் சென்றதுதான் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது. யார் இந்த சிறுமி? வடகொரியாவின் அடுத்த அதிபராக போவது இவர்தானா? என சமூக வலைத்தளங்களில் பலரும் கிம்ஜாங்உன் மகள் குறித்து தேடி வருகின்றனர்.

வடகொரியா அதிபரின் 12 வயது மகள் கிம் சூ-ஏ . இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வடகொரியாவில் சக்தி வாய்ந்த கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் முதன்முறையாக தனது தந்தையுடன் பொதுவெளியில் தோன்றினார்.

அதுவரை கிஞ்சாங்குன்னின் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து தகவல்கள் ஏதும் பெரிய அளவிற்கு வெளி உலகிற்கு தெரியாது. எனவே கிம் சூ-ஏ பொதுவெளியில் திடீரென தோன்றியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதன் பிறகு அவ்வப்போது வடகொரியாவில் முக்கியமான பொது நிகழ்ச்சிகளிலும் கிம்ஜாங் உன் மகள் தோன்றினாலும் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வது இதுவே முதல் முறையாகும். வடகொரியாவில் பல உயர்மட்ட அதிகாரிகளுடன் விருந்துகளில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு கிம்ஜாங்ன்னின் மரியாதைக்குரிய மகள் என அழைக்கப்பட்டுள்ளார். வடகொரியாவில் மரியாதைக்குரிய என்ற அடைமொழி ஆதி உயர்ந்த அதிகாரிகளுக்கே வழங்கப்படும். உதாரணமாக கிம்ஜாங் உன் மரியாதைக்குரிய தோழர் என அழைக்கப்படுகிறார்.

கிம்ஜாங் உன் அவரது மகளும் பொதுவெளியில் தங்களது அன்பை வெளிப்படுத்துவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்ய தூதரக விழாவிலும் கிம் சூ-ஏ காணப்பட்டார். வடகொரியாவில் அவரது உருவத்தில் தபால் தலைகள் வெளிவந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வடகொரியாவில் அடுத்த தலைவராக கிம்ஜாங் உன் மகளே வரக்கூடும் என்றும் இதற்காக தயார்படுத்தவே கிம் தனது மகள் கிம் சூ-ஏ பொதுவெளியில் அதிகம் காட்டி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் முடிவில் வடகொரியா உருவாக்கப்பட்டதிலிருந்து கிம் வசத்தினரே ஆட்சி செய்து வருகின்றனர்.

கிம் வசத்தினர் புனித இரத்தம் உடையவர்கள் என்றும் அவர்களே ஆட்சி செய்ய தகுதியானவர்கள் என்றும் வலியுறுத்தப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டில் கிம் சூ-ஏ ன் பெயரை நாட்டில் வேறு எந்த பெண்ணுக்கும் சூட்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் அந்த பெயரை ஏற்கனவே கொண்டிருப்பவர்கள் தங்களது பெயரை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கிம் வம்சத்தில் இதுவரை பெண்கள் ஆட்சி செய்ததில்லை என்றாலும் கிம் சூ-ஏ அடுத்த வாரிசாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.