Home உலகம் “உலகம் முழுவதும் அதிர்ச்சி – டிரம்ப் விதித்த வரி சட்டவிரோதமா?”

“உலகம் முழுவதும் அதிர்ச்சி – டிரம்ப் விதித்த வரி சட்டவிரோதமா?”

உலக நாடுகளுக்கு வரிவிதித்த அதிபர் டிரம்பை நோக்கி அமெரிக்க உச்ச நீதிமன்றம் சரமாறியாக கேள்வி எழுப்பியுள்ளது. அதே சமயம் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளனர்.

இந்த தீர்ப்பு டிரம்புக்கு எதிராக திரும்பினால் என்ன நடக்கும் விரிவாக பார்க்கலாம். பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரிவிதித்து அதிர்ச்சி கொடுத்தார் அதிபர் டோனல்ட் டிரம்ப்.

குறிப்பாக சீனாவுக்கு பல மடங்கு வரிவிதித்து அதிர்ச்சி கொடுத்த டிரம்புக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. பிறகு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு மீண்டும் வரியை குறைத்தார்.

அதேபோல இந்திய பொருட்களுக்கும் ஏற்கனவே 25 விழுக்காடு வரிவிதித்த டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து எண்ணை வாங்குவதை காரணம் காட்டி கூடுதலாக 25 விழுக்காடு வரியை விதித்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கான இறக்குமதி பாதிக்கப்படும்.

அதேபோல உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் என்று அமெரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தினர். வரி விதிப்பு விவகாரத்தில் கடந்த மே மாதம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் சில உத்தரவுகளை
பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த மேல்முறையிட்ட நீதிமன்றம். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் அதிபர் டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார் என்றும் டிரம்பின் பெரும்பாலான வரிவிதிப்புகள் சட்ட விரோதமானவை உடனடியாக கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதுமட்டுமின்றி வரிவிதிப்பில் அதிபருக்கு சில அதிகாரங்களை மட்டுமே நாடாளுமன்றம் வழங்கியுள்ளது என்றும் வரம்பற்ற அதிகாரத்தை அதிபருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் வழங்கவில்லை என அதிபர் டிரம்பை நீதிமன்றம் கடுமையாக சாடி இருந்தது.

அதே நேரம் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கியது. பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினார் டிரம்ப். இந்த நிலையில் உலக நாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையில் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

அவசர கால சட்டத்தின் கீழ் அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை டிரம்ப் மீறியதாக தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த ஒன்பது நபர்கள் கொண்ட அமர்வு. விரைவில் தீர்ப்பு வழங்கு உள்ளது.

இந்த வழக்கில் வரிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் இதுவரை அமெரிக்கா வசூலித்த வரிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.

மேற்கூறிய சட்டங்களுக்கு கீழ் வரிவிதிக்க முடியாது என்றாலும் டிரம்ப் அரசு வேறு சட்டங்களின் வழியே உலக நாடுகளின் மீது வரிகளை தொடர்ந்து விதிக்கும் என்றும் அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு