தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெலுங்கு திரையுலகின் மூத்த நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் அழைப்பை ஏற்று அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார்.
தான் வாங்கிய விருதுகள் பதக்கங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையை பிரம்மானந்தம் காண்பிக்கவே யோகிபாபு அவற்றை பார்த்து வியந்தார்.
முன்னதாக யோகி பாபுவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பிரம்மானந்தம் தாம் எழுதிய புத்தகம் ஒன்றின் தமிழ் பதிப்பை அவருக்கு பரிசு அளித்தார்.








