அமித்ஷா அவர்கள் நைனார் நாகேந்திரன் இல்லத்திற்கு தேநீர் விருந்திற்காக வந்து இருக்கிறார். திருநெல்வேலி மண்டல பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நெல்லையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமிஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதன் பின் பாளையங்கோட்டையில் உள்ள பாஜக மாநில இல்லத்தில் 29 வகையிலான உணவு பதார்த்தங்கள் நான்கு வகையிலான தேநீர்ருடன் மத்திய உள்துறை அமைச்சர் தேநீர் அருந்தி வருகிறார்.
நெல்லையின் அல்வா தொடங்கி வடமாநிலத்தின் டோக்லா வரை தேநீரில் இடம்பெற்றுள்ளது. பில்டர் காபி, கிரீன் டீ, லெமன் டீ உள்ளிட்ட நான்கு வகையான தேநீரும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக பாரம்பரிய நவதானிய உணவு வகைகளும் குளிப்பணியாரம், மெதுவடை, தயிர் வடை, சாம்பார் வடை உள்ளிட்ட உணவு பதார்த்தமும் தேநீர் விருந்தில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே 109 வகையிலான உணவு வகைகளுடன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நைனார் நாகேந்திரன் வீட்டில் ஏற்கனவே விருந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து இந்த விருந்திலிருந்து 20 நிமிடம் அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் அதனை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு கார் மூலம் செல்கிறார்.








