Home தமிழகம் “கூரை வீட்டில் தனியாக வாழும் மூன்று குழந்தைகள்… அரசு கருணை காட்டுமா?”

“கூரை வீட்டில் தனியாக வாழும் மூன்று குழந்தைகள்… அரசு கருணை காட்டுமா?”

திருவாரூர் அருகே தாய், தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் மூன்று பிள்ளைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்–சுமதி தம்பதிக்கு சுவாத்தி, ஸ்வேதா மற்றும் சுவேஷ் குமார் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் தாய் சுமதி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். தந்தை சிவகுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

தற்போது தாய், தந்தையை இழந்த இந்த மூன்று பிள்ளைகளும் தனியாக ஒரு கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் வீட்டின் கூரை மிகவும் பழுதடைந்து ஓட்டைகள் ஏற்பட்டு, மிக மோசமான நிலையில் உள்ளது.

இந்த மூன்று பிள்ளைகளின் வறுமை நிலையை அறிந்த கிராம மக்கள், தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை செய்து வருகின்றனர். இத்தகைய கடினமான சூழ்நிலையிலும், மூவரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தாமல், ஆர்வத்துடன் நன்கு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாய், தந்தையை இழந்து தவித்து வரும் சுவாத்தி, ஸ்வேதா மற்றும் சுவேஷ் குமார் ஆகியோருக்கு கல்விச் செலவுகள் மற்றும் அவர்களின் அடிப்படை தேவைகளுக்காக தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.