Home தமிழகம் ஒரு “ஹாய்” போதும் – சென்னை மாநகராட்சி சேவைகள் அனைத்தும் உங்கள் WhatsApp-ல்!

ஒரு “ஹாய்” போதும் – சென்னை மாநகராட்சி சேவைகள் அனைத்தும் உங்கள் WhatsApp-ல்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை ஆகியவற்றை க்யூஆர் கோடு மூலம் செலுத்துவதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சேவைகளை மக்கள் WhatsApp வழியாக வழங்கிடக்கூடிய புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தற்போது தொடங்கி வைத்திருக்கிறார்.

முன்னதாக சென்னை மாநகராட்சியின் மக்களுக்கான சேவை தற்போது சென்னை கார்ப்பரேஷன்..gov.in என்ற இணையதளம் மூலமாக மக்கள் பெற்று வந்தனர். இந்த நிலையில் தான் தற்போது 2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சென்னை மாநகராட்சியின் மக்களுக்கான சேவை அனைத்தும் WhatsApp வாயிலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தான் தற்போது இந்த WhatsApp எண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். 9445061913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஹாய் அல்லது சாட் பாக்ஸ்ல நேரடியாக சென்று ஹாய் என்று பதிவிட்டாலே சென்னை மாநகராட்சியினுடைய அனைத்து சேவைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குறிப்பாக பிறப்பு ,இறப்பு சான்றிதல் தொடர்பான தேவைகள், சொத்து வரி செலுத்துதல், புகார் பதிவேற்றம் செய்தல், தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் இந்த WhatsApp எண் மூலமாக அவர்கள் பதிவு செய்தால் அதற்கான பதிலை அந்தவாட்ப் மூலமாகவே அவர்கள் பெற முடியும் என்றும் இது அவர்கள் பல இடங்களுக்கு நேரடியாக செல்வது அல்லது லோக்கல் புரோக்ர்கள் மூலமாக சென்று பணத்தை இழப்பதை தடுப்பதற்காக புதிய நடவடிக்கையாக அமையும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.