தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு கல்வி ஆண்டும் பள்ளி வேலை நாட்கள், பருவ தேர்வுகள், விடுமுறை போன்றவற்றை திட்டமிட்டு நாட்காட்டி வடிவில் வெளியிடும். அதன்படி நடப்பு 2025- 2026 கல்வி ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அன்று பள்ளி திறக்கப்பட்ட தேதியில் இருந்து தொடங்குகிறது.
இந்த கல்வி ஆண்டில் மொத்தம் 210 வேலை நாட்களாக சொல்லப்பட்டிருக்கிறது. தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இது குறித்த அட்டவணை வெளியாகி உள்ளது.
அதனுடன் காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த அப்டேட் கூட வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும், தனியார் பள்ளிகளில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு. வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.
உயர்நிலை வகுப்புகளான 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.
தொடக்க நிலை வகுப்புகளான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதி விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
தற்போது வெளியான அட்டவணையின்படி பள்ளி கல்வியாண்டு நாட்காட்டிக்கு முன்பே தேர்வுகள் தொடங்குகின்றன. அதே சமயத்தில் தேர்வுகள் அனைத்தும் செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது.
இதனால் ஏற்கனவே நாட்காட்டியில் குறிப்பிட்டபடி, கல்வியாண்டு விடுமுறை அடுத்த மாதம் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








