ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைத்துள்ளதால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது. எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்ற பட்டியலும் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக நான்கு அடுக்குகளாக விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி தற்பொழுது இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டிருக்கிறது.
5% மற்றும் 18% என்று இரண்டு அடுக்குகளாக குறைத்து நேற்றைய தினம் நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் இந்த நடைமுறை செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்ற தகவல்கள்
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக இந்த ஜிஎஸ்டி வரி நான்கு அடுக்குகளா இருந்து வந்தது. இப்ப ரெண்டு அடுக்குகளா மாறிருக்கு.
செப்டம்பர் 22ல் இருந்து நடைமுறைக்கும் வரப்போகுது. இதனால் எந்தெந்த பொருட்களோட விலை குறையும் சில பொருட்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகு இந்தியா முழுவதுமே தொழில் செய்யக்கூடியவர்கள் பெரிய அளவிலே பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக பல இடங்களில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். தொடர்ந்து இந்த ஜிஎஸ்டியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஜிஎஸ்டி குறைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை
வைத்து வந்தார்கள்.
அதனுடைய அந்த கோரிக்கைகள் எல்லாம் ஏற்கப்பட்டுதான் தற்போது ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
நான்கு அடுக்குகள் அதாவது 5% 12% 18% 28% இப்படி நான்கு அடுக்குகளாக இருந்தது. இனி இரண்டு அடுக்குகள் மட்டும்தான் இருக்கும். ஒன்று 5% அல்லது 18% இந்த இரண்டு அடுக்குகள் மட்டும்தான் இருக்கும். மீதம் இருக்கக்கூடிய இரண்டு அடுக்குகள் நீக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
நேற்று அறிவித்திருக்கக்கூடிய இந்த அறிவிப்புகள் இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ஜிஎஸ்டி விலைக்குறைப்பின் காரணமாக நமது மக்கள் பயன்படுத்தக்கூடிய அன்றாட பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், மிக மிக முக்கியமான மருந்து பொருட்கள், நோட்டு எழுத்து சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்றவை எல்லாம் அதிக அளவிலே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக பல விவரங்கள் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் எந்தெந்த பொருளுக்கெல்லாம் விலை குறைய இருக்கிறது முன்பு எவ்வளவு இருந்தது இப்போது எவ்வளவு குறைய இருக்கிறது என்ற விவரங்களை பார்க்கலாம்.
முதலிலே பால் பொருட்கள் குறிப்பாக பால் பாக்கெட், நெய், பன்னீர், பாலடைக்கட்டி போன்றவற்றுக்கெல்லாம் இதற்கு முன்பு 12% வரி இருந்தது. தற்போது அது 5%ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர பாஸ்தா, பிஸ்கட், சாக்லேட், கோக்கோ போன்ற பொருட்களுக்கான அந்த வரி 12% அல்லது 18% வரை பொருட்களுக்கு ஏற்ப வசூலிக்கப்பட்டு வந்தது. அவை இனி 5%ஆக குறைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேரிச்சம் பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பொருட்களுக்கு மீதான வரி 12%லிருந்து 5%ஆக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர மிக்சர் உள்ளிட்ட சாப்பிட தயாராக இருக்கக்கூடிய பேக் செய்யப்பட்ட உணவு பொருட்கள் அதன் மீதான ஜிஎஸ்டி வரி 18%ல இருந்து 5%ஆக குறைக்கப்படுவதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் முக்கியமாக இந்தியாவை பொறுத்தவரையிலே வேளாண்மையை நம்பி இருக்கக்கூடிய நாடு. நாடு முழுவதும் விவசாயிகள் தான் அதிக அளவில் இருக்கிறார்கள். இந்தியாவினுடைய ஒரு முதுகெலும்பாக விவசாயம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
எனவே விவசாய பொருட்களுக்கான பல வரிசலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்த வரிக்குறைப்பை பொறுத்தவரையிலே உரங்கள் மற்றும் விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான அந்த வரி 12 அல்லது 18%ல இருந்து 5%ஆக குறைக்கப்படுகிறது.
இது விவசாயிகளுக்கு இன்பமான ஒரு செய்தியாக பதிவாகி இருக்கின்றது. உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ சாதனம் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஆகியவை எல்லாம் 18%லிருந்து 5%ஆக குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.








