Home இந்தியா “‘ஜெய் ஹிந்த்’ முழக்கத்தில் அதிர்ந்த பரங்கிமலை – தேசம் காக்க எழுந்த வீரர் வீராங்கனைகள்”

“‘ஜெய் ஹிந்த்’ முழக்கத்தில் அதிர்ந்த பரங்கிமலை – தேசம் காக்க எழுந்த வீரர் வீராங்கனைகள்”

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து நாட்டை காக்க செல்லும் வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னை பரங்கிமலையில் 1963ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று இந்திய ராணுவத்தில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

இதேபோல கடந்த 11 மாதங்களாக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்ட 130 ஆண் அதிகாரிகள் 25 பெண் அதிகாரிகளின் பயிற்சியை நிறைவு செய்தனர்.

பயிற்சி முடித்த வீரர்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய ராணுவத்தில் சேரவுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சாரட் வண்டியில் பயிற்சி மையத்திற்கு வருகை தந்த விமானப்படை தலைமை தளபதி அமர்பிரீத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பயிற்சி முடித்த வீரர் வீராங்கணிகள் மொத்தமாக நடத்திய அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தளபதிஅமர்பிரீத் சிங் ஏற்றுக்கொண்டார்.

பயிற்சி முடிந்து இந்திய ராணுவத்தில் சேர்வதை கொண்டாடும் விதமாக வானில் இந்திய தேசிய கொடியின் நிறங்களாலான பலூன்களை வானில் பறக்கவிட்டனர்.தொடர்ந்து சக வீரர்களுடன் இணைந்து வழக்கமான முறையில் முழக்கங்களை எழுப்பி ஒருவருடன் ஒருவர் ஆற தழுவி கொண்டாடி மகிழ்ந்தனர்.