Home உலகம் “48 ஆண்டுகளாக விண்வெளியில் ஒலிக்கும் பூமியின் குரல்”

“48 ஆண்டுகளாக விண்வெளியில் ஒலிக்கும் பூமியின் குரல்”

மனித இனம் இதுவரை உருவாக்கிய ஒரு பொருள் நம் சூரிய மண்டலத்தையே தாண்டி நட்சத்திரங்களுக்கு இடையேயான ஆழமான விண்வெளியில் தனியாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவீங்களா?

அதுவும் ஒன்று இல்லை இரண்டு அவற்றின் பெயர்கள் வயோஜர் ஒன்று(voyager 1) மற்றும் வயோஜர் இரண்டு (Voyager 2) கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னாடி 1977 ஆம் ஆண்டு பூமியிலிருந்து புறப்பட்ட இரட்டை விண்கலங்கள் 48 வருடங்கள் கழித்து இன்றும் பூமிக்கு சிக்னல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன

மனித குலத்தின் மாபெரும் சாதனையின் பயணத்தையும் அவை செய்த தியாகத்தையும் முழுமையாக பார்க்கலாம்.

1960களில் விஞ்ஞானிகளுக்கு ஒரு பிரம்மாண்டமான கனவு இருந்துச்சு. கிராண்ட் டூர் என்று பெயரிடப்பட்ட கனவின்படி ஒரே ஒரு விண்கலத்தை அனுப்பி வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்னு எல்லா வெளி கிரகங்களையும் சுற்றி பார்க்கணும்.

இது எப்படி சாத்தியம்னா 1970களின் பிற்பகுதியில் இந்த கிரகங்கள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் வரப்போகுதுன்னு விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சாங்க.

இதனால ஒரு கிரகத்தோட ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, அடுத்த கிரகத்துக்கு ஈஸியா பயணிக்க முடியும். ஆனா பட்ஜெட் பிரச்சனையால கிராண்டடூர் திட்டம் கைவிடப்பட்டு வியாழன் மற்றும் சனியை சுற்றி பார்க்க வயோஜர் ஒன்று மற்றும் வயோஜர் இரண்டு என்ற இரண்டு விண்கலங்களை அனுப்ப முடிவு செஞ்சாங்க.

சுவாரசியமான விஷயம் என்னன்னா வயோஜர் இரண்டுதான் வயோஜர் ஒன்றுக்கு இரெண்டு வாரம் முன்னாடியே விண்ணில் ஏவப்பட்டது.

வயோஜர் ஒன்று வியாழனையும் சனியையும் வெற்றிகரமாக கடந்து சென்றது. அதுக்கப்புறம் மற்ற கிரகங்களை பார்த்திருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகள் சனியோட துணைக்கோளான டைட்டனை நெருக்கமாக ஆய்வு செய்ய விரும்புனாங்க.

அதனால வயோஜர் ஒன்று தனது பாதையை மாற்றி டைட்டனை நோக்கி பயணித்து அதை பற்றிய அரிய தகவல்களை பூமிக்கு அனுப்பியது.

இந்த முடிவால வயோஜர் ஒன்று மற்ற கிரகங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்தது. ஆனா விஞ்ஞானிகள் மனசுல பழைய கிராண்டூர் கனவு இன்னும் இருந்துச்சு.

அதனால வயோஜர் இரண்டு விண்கலத்தை கனவை நிஜமாக்கும் நோக்கத்தோடையே வடிவமைத்திருக்காங்க.

வயோஜர் இரண்டு வியாழன் சனி கிரகங்களை கடந்த பிறகு தனது பயணத்தை நிறுத்தல. மனித குல வரலாற்றிலேயே முதல் முறையாக யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய பனி கிரகங்களை நெருக்கமாக சென்று புகைப்படும் எடுத்த ஒரே விண்களும் என்று மாபெரும் சாதனையை படைத்தது.

கிராண்டடூர் கனவை வயோஜர் இரண்டுதான் நிஜமாகியது. தனது கிரக பயணத்தை முடித்து கொண்டு சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறும் முன் வயோஜர் ஒன்று ஒரு கடைசி வேலையை செய்தது.

அது தன்னுடைய கேமராவை திருப்பி நம்ம சூரிய மண்டலத்தை ஒரு புகைப்படம் எடுத்தது. அந்த புகைப்படத்திற்கு பிறகுதான், நம்ம பூமிக்கு வெளிர் நீள புள்ளி, அதாவது பேல் ப்ளூ டாட் என்ற பெயர் வந்தது.

பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது அந்த ஒரு புகைப்படம் நமக்கு உணர்த்தியது. 1990ல் அந்த புகைப்படத்தை எடுத்த பிறகு, பயோஜர் ஒன்றின் கேமராக்கள் அணைக்கப்பட்டன.

அவற்றின் பயணம் முடிந்துவிட்டதாகவே பலரும் நினைத்தனர். ஆனா அதிசயம் என்னன்னா 48 வருடங்கள் கழித்து இன்றும் பூமியிலிருந்து பல பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தாலும் வயோஜர் ஒன்று மற்றும் வயோஜர் இரண்டு ஆகிய இரண்டு விண்கலன்களும் இன்றும் பூமிக்கு சிக்னல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

அவற்றின் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. அவற்றின் கருவிகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டு வருகின்றன. சில சமயம் அவற்றின் கணினியில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஆனாலும் நாசா விஞ்ஞானிகளின் விடா முயற்சியால் இரட்டை விண்கலன்களும் இன்றும் செயல்படுகின்றன. விஞ்ஞானிகள் வயோஜரிடமிருந்து வரும் ஒவ்வொரு சிக்னலும் எங்களுக்கு கிடைத்த ஒரு போனஸ் தான்.

மனிதர்களின் விடா முயற்சிக்கும் அறிவியலின் சக்திக்கும் ஒரு மிகச்சிறந்த உதாரணம் வயோஜர் இரட்டையர்கள் .