Home தமிழகம் “வாழ்க்கையை மாற்றிய நாள்… மீனாவின் உருக்கமான நினைவு”

“வாழ்க்கையை மாற்றிய நாள்… மீனாவின் உருக்கமான நினைவு”

மறைந்த நடிகை சௌந்தர்யாவுடன் நானும் ஹெலிகாப்டரில் போக வேண்டியது. நடிகை மீனா வெளியிட்ட பகிர் உண்மை. தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சௌந்தரியா மறைவு குறித்து மீனா ஒரு உண்மையை சொன்னதுதான் பேரதிர்ச்சி. சினிமா உலகில் சௌந்தர்யாவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

2004ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். வெறும் 32 வயதிலேயே அவரது மறைவு சினிமா துறையை உழுக்கியது. இன்றும் சினிமா பிரபலங்கள் சௌந்தரியாவை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

மூத்த நடிகை மீனா சௌந்தர்யாவிற்கு முன்பே சினிமாவில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா பின்னர் சௌந்தர்யாவுடன் போட்டி போட்டு நடித்தார். நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் மீனா கலந்து கொண்டார்.

தனது திரைப்பயணம் குடும்பம் குறித்து மீனா பகிர்ந்து கொண்டார். ஜெகபதி பாபு ஒரு புகைப்படத்தை காண்பித்து இதை பார்த்ததும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்டார். அந்த புகைப்படத்தில் போலீஸ் உடையில் சௌந்தர்வுடன் மீனா இருந்தார்.

அதை பார்த்ததும் மீனா உருக்கமாக பேசினார். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது சௌந்தரியா அற்புதமான நண்பர். எனக்கு நல்ல தோழி. அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அன்று பிரச்சாரத்திற்கு சௌந்தரியாவுடன் நானும் சென்றிருக்க வேண்டும். என்னையும் அழைத்தார்கள். ஆனால் எனக்கு அரசியல் பிரச்சாரம் பிடிக்காது. அதனால் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி நான் மறுத்துவிட்டேன்.

மேலும் மீனா கணவரின் மறைவுக்கு பிறகு தனது மகளுடன் மீனா வாழ்ந்து வருகிறார். தன்னை பற்றி பரவும் செய்திகள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆழமாக பாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.