Home உலகம் “ஒரு தலைமுறையையே பாதிக்கக்கூடிய அபாயம் – இங்கிலாந்தை அதிர்ச்சியடைய வைத்த புள்ளி விவரம்”

“ஒரு தலைமுறையையே பாதிக்கக்கூடிய அபாயம் – இங்கிலாந்தை அதிர்ச்சியடைய வைத்த புள்ளி விவரம்”

இங்கிலாந்தில் ஒரு அதிர்ச்சி செய்தி உலுக்கி கொண்டு வருது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத ஒரு பெரும் சமூக மாற்றம் அங்க நிகழ்ந்துட்டு வருது. அது எதுன்னு பாத்தீங்கன்னா அங்க டீனேஜ் பெண்களுடைய அதாவது 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளின் கர்ப்ப விகிதம் முதன்முறையா அதிகரிச்சிருக்கு.

கடந்த 25 ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வந்த ஒரு பிரச்சனை. இப்போ திடீரென மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. ஏன்? இதன் பின்னணியில் இருப்பது என்ன? வாருங்கள் விரிவா பார்க்கலாம். 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு டீனேஜ் கர்ப்பத்தை குறைக்க ஒரு பிரத்தயேக திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன் விளைவாக கடந்த கால் நூற்றாண்டில் 18 வயதுக்கு உட்பட்டோர் கருதரிக்கும் விகிதம் 50%த்திற்கும் அதிகமாக குறைந்தது. இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டது. ஆனால் இப்போ நிலைமை தலைகீழாக மாறி இருக்கு.

2022 ஆம் ஆண்டுக்கான தேசிய புள்ளி விவரங்களின் படி 16 முதல் 17 வயதுடைய பெண்கள் மற்றும் 16 வயதுடைய பெண்கள் என இரு பிரிவினரிடமும் கர்ப்பம் அடையும் விகிதம் அதிகரிச்சிருக்கு. குறிப்பா கோஸ் போர்ட் என்ற ஒரு நகரத்தில் 1000 டீனேஜ் பெண்களுக்கு 28 பேர் கர்ப்பம் தரிப்பதாக மிக அதிகமான அதிகரிப்பு பதிவாகி உள்ளது.

இந்த புள்ளி விவரங்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைமையை விட குறைவாக இருந்தாலும் பல வருடங்களா குறைந்து வந்த ஒரு பிரச்சனை. இப்ப மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதுதான் அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.

ஏன் இந்த திடீர் மாற்றம் உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டமைப்பான எல்ஜி இதற்கான சில முக்கிய காரணங்களை முன்வச்சிருக்கு. முதலாவதா கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம். ஊரடங்கு காலத்தில பள்ளிகள் மூடப்பட்டது. சரியான ஆலோசனைகள் கிடைக்காதது போன்றவை ஒரு முக்கிய காரணமா பார்க்கப்படுது.

இரண்டாவதா பள்ளிக்கு மாணவர்கள் சரியாக வராதது. மூன்றாவதாக சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை மற்றும் இணையம் போன்ற டிஜிட்டல் வசதிகள். அனைவருக்கும் கிடைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம் அப்படின்னு நிபுனர்கள் கருதுகின்றனர்.

எல்ஜிஏவின் சுகாதார குழு தலைவர் டாக்டர் வென்டி டெய்லர் இது வெறும் கர்ப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல இது நம்மளுடைய இளம் பிள்ளைகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை. 25 வருடங்களாக நாம் சாதித்த வெற்றியை தக்க வைக்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் அப்படின்னு எச்சரிச்சிருக்காரு.

அரசு தரப்பில் நாங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கல்வி ஆலோசனை மற்றும் சுகாதார சேவைகள் மூலமா இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வரும் அப்படின்னு சொல்றாங்க. இன்னைக்கு காலகட்டத்தில் இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு உறவுகள், பாலியல் மற்றும் சுகாதார கல்விக்கான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ளோம் .அப்படின்னு தெரிவிக்கப்பட்டிருக்கு.

இருப்பினும் இந்த ஒரு வருட அதிகரிப்பு ஒரு தற்காலிகமான பின்னடைவா அல்லது ஒரு புதிய அபாயகரமான போக்கின் தொடக்கமா அப்படின்னு அச்சம் நிபுனர்களிடையே எழுந்திருக்கு. ஒரு தலைமுறையையே பாதிக்கும் இந்த முக்கியமான பிரச்சனையில் இங்கிலாந்து அரசு எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் அப்படின்றத பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.