Home உலகம் “ஒரே அறிவிப்பில் 13,000 பேர் பணிநீக்கம்: உலகை அதிரவைத்த போஷ் நிறுவன முடிவு!”

“ஒரே அறிவிப்பில் 13,000 பேர் பணிநீக்கம்: உலகை அதிரவைத்த போஷ் நிறுவன முடிவு!”

உலக புகழ் பெற்ற போஷ் (Bosch) நிறுவனத்தில் இருந்து ஒரு இடி போன்ற செய்தி வெளியாக்கி உலகெங்கிலும் உள்ள ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே அறிவிப்பில் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக போஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பில்லியன் கணக்கான பணத்தை சேமிக்க எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவுக்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணங்கள் என்ன? வாருங்கள் ஆழமாக அலசுவோம். ஜெர்மனியை சேர்ந்த மிகப்பெரிய இன்ஜினியரிங் நிறுவனமான போஷ் சுமார் 2.5 பில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 22,000 கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாபெரும் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

குறிப்பாக வாகனங்களுக்கான பாகங்கள் மற்றும் மென்பொருளை தயாரிக்கும் அதன் மொபிலிட்டி பிரிவில் தான் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணங்களை போஸ் நிறுவனம் முன்வைக்கிறது.

காரணம் ஒன்று போட்டி நிறுவனங்களின் அழுத்தம். டெஸ்லா மற்றும் சீனாவின் பிஒய்டி போன்ற புதிய நிறுவனங்கள் ஆட்டோமொபைல் சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. அவற்றின் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் ஆக்ரோஷமான விலை நிர்ணயம் போஷ் போன்ற பாரம்பரிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

காரணம் இரண்டு அரசியல் மற்றும் வர்த்தக போர். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரிவிதித்தார். இந்த வர்த்தக போர் போஷ் நிறுவனத்தின் செலவுகளை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் செலவுகளால் இவ்வளவு அதிக் ஊழியர்களை வைத்து நிறுவனத்தை நடத்துவது சாத்தியமற்றது என்று போஸ் கூறியுள்ளது.

காரணம் மூன்று சந்தையில் தேக்க நிலை. உலகலாவிய வாகன சந்தையின் வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது. புதிய கார்களுக்கான தேவை வெகுவாக குறைந்துவிட்டதால் போஷ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தேவையும் கடுமையாக சரிந்துள்ளது.

இதனால் புதிய தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்களில் முதலீடு செய்வதையும் குறைக்க போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிநீக்கம் குறித்து போஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்டீபன் குரோம் பேசும்போது ஆனால் துரதிருஷ்ட வசமாக வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

இந்த வேலை நீக்கத்தால் ஜெர்மனியில் உள்ள பியர் பேக் மற்றும் ஸ்விபடிங்கன் போன்ற பல முக்கிய இடங்களில் உள்ள உற்பத்தி விற்பனை மற்றும் நிர்வாக பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்படலாம். அதே சமயம் இங்கிலாந்தில் உள்ள வேலைகள் தற்போதைக்கு பாதிக்கப்படாது என்று போஷ் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும் சந்தை நிலவரத்தை பொறுத்து இதுவும் மாறலாம் என எச்சரித்துள்ளது. ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஜெர்மனியின் கார் தொழில் இன்று வெளிநாட்டு போட்டியாளர்களால் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. டெஸ்லா போன்ற புதிய நிறுவனங்களின் எழுச்சி, அரசியல் காரணங்கள், பொருளாதார மந்தநிலை இவை அனைத்தும் சேர்ந்துதான் இந்த மாபெரும் வீழ்ச்சிக்கு காரணமாகி இருக்கிறது.