மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான டெல்லி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக கருதப்படும் அறிவிப்பாக அகவிலைப்படி உயர்வு 3% அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை இந்த அகவிலைப்படி 55 விழுக்காடாக இருந்தது. தற்போதைய உயர்வின் மூலம் இது 58 விழுக்காடாக ஆகும். இந்த உயர்வின் பயன் சுமார் 20 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியர்கள் பெறுவார்கள்.
இந்த அறிவிப்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற உயர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் என்பது பழக்கம். நடப்பாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இதன் பயன் அமல்படுத்தப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.








