தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Upper Air Cyclonic Circulation) நிலவுவதாகவும், அதன் காரணமாக பல மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வரும் 8ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








