புகழ்பெற்ற புத்தகமான ரிச் டாட் புவர் டேட் நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, இப்போது உலக மக்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை வழங்கியுள்ளார். அதாவது, வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார சரிவு தொடங்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த பாதிப்பு அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் ஆசியாவிலும் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கியோசாகி இந்த பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவு (AI) என்று சுட்டிக்காட்டியுள்ளார், இது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால், அது லட்சக்கணக்கான மனிதர்களின் வேலைகளை பறித்து வருகிறது. மக்கள் வேலை இழந்தால் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கான தேவையும் குறையும். குறிப்பாக, கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் (Work From Home) பெருகியுள்ளது.
இதன் காரணமாக அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புக்கான ரியல் எஸ்டேட் சந்தைகள் பலப்படியாக பாதிக்கப்படுகின்றன. மேலும், சம்பந்தப்பட்ட சந்தைகள் சரிந்துவிடும் அபாயமும் உள்ளது. 2013 ஆம் ஆண்டிலேயே கியோசாகி தனது Rich Dad’s Prophecy புத்தகத்தில் வரலாற்றின் மிகப்பெரிய சரிவு வரப்போகிறது என்று கணித்தார். துரதஷ்டவசமாக, அது இப்போது உண்மையாகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் பொருளாதார சரிவில் இருந்து தப்பி மக்கள் தங்கள் செல்வத்தை பாதுகாக்க, சில குறிப்பிட்ட முதலீடுகளில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கியோசாகி ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது, அதிக அளவு தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்திரேயம் ஆகியவற்றில் முதலீடு செய்யும் நேரம் இது என அவர் கூறியுள்ளார்.
மேலும், மேற்கண்டவற்றில் வெள்ளி தான் மிகவும் பாதுகாப்பான முதலீடு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இன்றைய சந்தை நிலவரப்படி, வெள்ளியின் விலை 50 ஆக உள்ளது. ஆனால் விரைவில் இது 70 வரை உயரக்கூடும். கியோசாகி தனது கணிப்பில், 2026 ஆம் ஆண்டுக்குள் வெள்ளியின் விலை 200 தொடக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். புதிய வெள்ளி கிடைக்கல் அரிதாகி வருவதால், இதன் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் இந்த சரிவால் தங்கள் சேமிப்பை இழக்க நேரிடும் என்றாலும், நீங்கள் இந்த பொருளாதார சரிவுக்கு இப்போதே தயாராக இருந்தால், அது உங்களை மேலும் பெரிய பணக்காரராக மாற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இவரது கணிப்பு சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








