Home உலகம் பிரிக்ஸ் நாடுகளின் சதுரங்க செட்! அமெரிக்கா–ஐரோப்பாவை வியக்க வைத்த பசுமை பிளான்!

பிரிக்ஸ் நாடுகளின் சதுரங்க செட்! அமெரிக்கா–ஐரோப்பாவை வியக்க வைத்த பசுமை பிளான்!

ஒரு பக்கம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்; இன்னொரு பக்கம் ரஷ்யா, சீனா, இந்தியா — இப்படி ஒரு பெரிய அதிகாரப் போட்டி நடந்துகொண்டே இருக்கிறது. போர், பொருளாதார தடைகள் என்று ஒருவரை ஒருவர் மிரட்டிக்கொண்டே வருகின்றனர்.

ஆனால் இந்த எல்லா சண்டைகளுக்கும் நடுவில், யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தில் பிரிக்ஸ் நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய “மாஸ்டர் பிளான்” போட்டிருக்கின்றன. அந்த ரகசிய அஜெண்டா என்ன என்பதை பார்க்கலாம்.

இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் வர்த்தக மாநாடு சமீபத்தில் நடந்தது. அதில் ஒரு ஆச்சரியமான விஷயம் வெளியாகியுள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா எவ்வளவு பொருளாதார தடைகள் போட்டாலும், அவர்கள் தங்களின் பருவநிலை மாற்ற இலக்குகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இதில் முக்கியமானது, ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோகெமிக்கல் நிறுவனமான “சிபுர்”. “நாங்கள் பூமியை காப்பாற்றும் எங்கள் கடமையில் உறுதியாக இருக்கிறோம்” என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

போர் நடந்தாலும், தடைகள் இருந்தாலும், கார்பன் குறைத்தல், மறுசுழற்சி போன்ற செயல்களை நிறுத்தப்போவதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். சரி, போர் செய்து கொண்டிருக்கும் ரஷ்யா திடீரென்று சுற்றுச்சூழல் மீது ஏன் இத்தனை பாசம் காட்டுகிறது?

இங்கேதான் உண்மையான வணிக தந்திரம் இருக்கிறது. இது வெறும் உலகத்தை காப்பாற்றுவது மட்டுமல்ல; இது ஒரு பெரிய வணிக வியூகம். எதிர்காலத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட, சுற்றுச்சூழல் நட்பு பொருட்களுக்கே பெரிய சந்தை இருக்கும். அந்த மார்க்கெட்டைக் கைப்பற்றுவதே இப்போது அவர்களின் முதலுறுதி.

அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள்? பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து புதிய பொருட்களை உருவாக்குதல், தொழிற்சாலைகளுக்கு காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துதல் போன்ற பல பசுமைத் திட்டங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள்.

அதாவது, சுற்றுசூழலை பாதுகாப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை அவர்கள் நிரூபித்து காட்டுகின்றனர்.இந்த ஒரு செயல் உலக நாடுகளுக்கு ஒரு பெரிய செய்தியை சொல்கிறது: பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்கா–ஐரோப்பா சொல்வதை மட்டும் கேட்காமல், தங்களுக்கென ஒரு புதிய பாதை, ஒரு புதிய பொருளாதார அமைப்பை உருவாக்க முயல்கின்றன.

“உங்கள் தடைகள் எங்களை கட்டுப்படுத்தாது… எங்கள் பாதை தனி!” என்று அவர்கள் மறைமுகமாக தெரிவிக்கின்றனர்.ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பருவநிலை மாற்றத்தை ஒரு வாய்ப்பாக கொண்டு, புதிய உலகளாவிய சக்தியாக உருவெடுக்க முயற்சி செய்து வருகின்றன.