Home உலகம் ஒரு கணத்தில் மாறிய வாழ்க்கை: கடலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

ஒரு கணத்தில் மாறிய வாழ்க்கை: கடலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

ஆஸ்திரேலியாவில் கடலில் மகிழ்ச்சியாக நீந்திக் கொண்டிருந்த இளம் பெண் சுறா தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு கடற்கரைக்கு 20 வயது இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சென்றிருந்தார்.

இருவரும் கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போது சுறா இருவரையும் தாக்கியது. இதில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய ஆண் நண்பர் கடுமையான காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அதிகாரிகள் அந்தக் கடற்கரையை உடனடியாக மூடி, சுற்றுலா பயணிகள் அங்கு நீராடுவதற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளனர்.