2026 ஐபிஎல் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி பேட்டர் மேக்ஸ்வெல் குறித்து இது முக்கிய செய்தியாக வெளிவந்துள்ளது.
ஐபிஎல் மினி ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்யாத நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவந்துள்ளது — 2026 ஐபிஎல் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.
ரசிகர்களுக்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் நன்றி எனவும், ஐபிஎல் நினைவுகளும் இந்தியாவின் ஆற்றலும் எப்போதும் என்னுடன் இருக்கும் எனவும் மேக்ஸ்வெல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் என்னை சிறந்த கிரிக்கெட் வீரராகவும் மனிதனாகவும் மாற்றியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








