Home உலகம் “வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நன்றி… வசதிகளை மேம்படுத்தும் சிங்கப்பூர் அரசு!”

“வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நன்றி… வசதிகளை மேம்படுத்தும் சிங்கப்பூர் அரசு!”

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் குடியிருப்பு வசதிகளும் மருத்துவ வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் டான் சீ லெங்  தெரிவித்தார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக பாடுபட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூரில் 10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் வேலை செய்கின்றனர். இதில் இந்தியர்களும் கணிசமாக உள்ளனர்.