டிராமா ட்ரூப்பில் நடிகராக இருந்து அதன் பின் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி அதன் பிறகு சின்னதிரையில் காமெடி நடிகராக பிரபலமானவர் எம்.எஸ் பாஸ்கர்.
எம்எஸ் பாஸ்கர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார். பார்க்கிங் படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் எம்எஸ் பாஸ்கர் ஒரே நாளில் இரண்டு கார்களை வாங்கி இருக்கிறார். அந்த போட்டோவை பகிர்ந்திருக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா. ஒரு காலத்தில் வாழ வீடு கூட இல்லாமல் வறுமையில் வாடியது பற்றி எமோஷனலாக பதிப்பிட்டு இருக்கிறார்.
சொந்த வீடு இல்லாமல் நாளைக்கு எங்கே போய் வாழ்வது என தெரியாத நிலையில் இருந்து தற்போது ஒரே நாளில் இரண்டு கார்களை வாங்கும் அளவுக்கு வந்திருப்பது எளிமையான விஷயம் அல்ல.
கடினமாக உழைத்த அப்பா எம்எஸ் பாஸ்கர் மற்றும் பணத்தை சிக்கனமாக செலவு செய்து சேமித்த அம்மா ஆகிய இருவரது வெற்றி இது என மகள் ஐஸ்வர்யா உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.








