மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாடு முழுவதும் உள்ள அதன் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள 650 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. அரசு வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
முக்கியத் தேதிகள்:
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: பிப்ரவரி 16, 2026
- விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 8, 2026
- முதற்கட்டத் தேர்வு (Preliminary Exam): ஏப்ரல் 11, 2026 (தற்காலிகமானது)
- முதன்மைத் தேர்வு (Main Exam): ஜூன் 7, 2026 (தற்காலிகமானது)
பணியிடங்கள் விவரம்:
சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், புது தில்லி உட்பட இந்தியா முழுவதும் உள்ள 16 முக்கிய நகரங்களில் இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வங்கித் தேவையைப் பொறுத்து இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கை மாற்றப்படலாம்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பை (Bachelor’s Degree) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். (SC, ST மற்றும் PwBD பிரிவினருக்கு தேர்ச்சி பெற்றாலே போதுமானது).
- வயது வரம்பு: பிப்ரவரி 1, 2026 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது, 02.02.1998 முதல் 01.02.2006-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).
- கூடுதல் தகுதி: கணினியில் ‘Word Processing’ செய்யும் அறிவு இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை (தமிழ்) எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் மூன்று நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- முதற்கட்டத் தேர்வு (Prelims)
- முதன்மைத் தேர்வு (Mains)
- மொழித் திறன் தேர்வு (Language Proficiency Test – LPT)
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rbi.org.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.








