Home திரையுலகம் “விவாகரத்து பேச்சு பற்றி அபிஷேக் பச்சன் கடும் எச்சரிக்கை!”

“விவாகரத்து பேச்சு பற்றி அபிஷேக் பச்சன் கடும் எச்சரிக்கை!”

திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன், கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்தனர்.

இந்த தம்பதிக்கு ஆரத்தியா எனும் மகள் உள்ளார். ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில், இதுகுறித்து கடும் கோபத்துடன் பேசியுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன். முன்பு மக்கள் “நாங்கள் எப்போது திருமணம் செய்வோம்?” என்று தெரிந்து கொள்ள விரும்பினர்.

“இப்போது ‘எப்பொழுது விவாகரத்து செய்வோம்’ என்று பேசுகிறார்கள். என் மனைவிக்கு என் உண்மை தெரியும். அவருடைய உண்மை எனக்கு தெரியும்.

எங்கள் வாழ்க்கை குறித்து வரும் பொய்யான வதந்திகள் எங்களை பாதிக்காது. ஆனால் என்னையும் என் குடும்பத்தையும் பற்றி தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது” என எச்சரித்து பேசியுள்ளார்.