மலையாள சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி, இப்பொழுது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வளர்ந்தவர் நடிகை நயன்தரா.
ஜவான் படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாகவும் உருவெடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக ரூபாய் 10 கோடி வரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்துள்ள இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதை தாண்டி, பலவிதமான பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார். தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல துறைகளில் பணியாற்றி அதில் வெற்றியையும் அடைந்துள்ளார்.
பிஎம்டபிள்யூ, மெசடிஸ் பென்ஸ் உள்ளிட்ட பல சொகுசு கார்களை நயன்தராவிடம் உள்ளது. ஹைதராபாத் மற்றும் சென்னையில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள பங்களா, கேரளாவில் வீடுகள் என பல சொத்துகளும் இவரிடம் உள்ளன.
இதன் மூலம், அவரது முழு சொத்து மதிப்பு ரூபாய் 180 கோடிக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.








