ரஜினியின் 75வது பிறந்தநாளை ஒட்டி, இன்றைய தினம் 25 வருடங்களுக்கு முன்பு வெளியான படையப்பா திரைப்படம் ரீரிலீஸ் ஆகியுள்ளது. இதற்காக படத்தை காண திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் ஏராளமான ஏற்பாடுகளை செய்து கொண்டாடி வருகிறார்கள்.
குறிப்பாக, அவர் நடித்த படையப்பா திரைப்படம் இன்று மறு வெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக காலையிலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து, அந்த படம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான போது எவ்வளவு கொண்டாட்டம் நடைபெற்றிருந்தோ அதே அளவிற்கு களைகட்டும் உற்சாகத்தோடு தற்போது கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக இந்த படம் ரீரிலீஸ் செய்யப்பட்ட தேதியும் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளும் ஒரே நாளில் வருவதால், ரசிகர்கள் உற்சாகத்தோடு படம் அனுபவித்து வருகிறார்கள்.
மேலும், ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்தநாளும், திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்திருக்கிறார் என்பதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை காசி திரையரங்குகளில் ரசிகர்கள் பேனர்கள் வைத்து, பட்டாசுகள் வெடித்து அவர்களின் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேரடியாக திரையரங்குக்கு வருகை தந்து ரசிகர்களுடன் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர், ரசிகர்களுடன் சேர்ந்து படையப்பா திரைப்படத்தைதிரையரங்கில் பார்த்து கொண்டாடினார்.








