கடந்த 2004ஆம் ஆண்டு அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்த ‘அட்டகாசம்’ படம் வெளியாகியது. இதில் அவருடன் பூஜா, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சரண் இயக்கத்தில் வெளியாகிய இந்த படத்துக்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘அட்டகாசம்’ மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸாகியுள்ளது.
ரீரிலீஸ் என்றாலும், FDFS போலவே கட்டவுட்கள் வைத்து, வெடிவெடித்து ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ‘அட்டகாசம்’ போடும் திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் வெடி கொளுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இதைக் கண்ட நெட்டிசன்கள், “அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்ததாலேயே நடந்த மாற்றங்கள் எல்லாம் வீணா? இதைப் பார்த்து அஜித் மீண்டும் ரசிகர்களை கண்டிக்கும் இன்னொரு அறிக்கை வெளியிடலாம்!” என்று விதவிதமான விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.








