இந்த 2025ஆம் ஆண்டில் விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்கள், பத்மபூஷன் விருது, கார் ரேஸ் வெற்றிகள் மற்றும் கார் ரேசிங்கிற்கு கிடைத்த ஸ்பான்சர்ஷிப் ஆகிய எக்கச்சக்கமான வெற்றிகளும் புகழ்மாலைகளும் அஜித் குமாருக்கு கிடைத்துள்ளன.
இந்நிலையில், பரிதாபங்கள் புகழ் கோபி, நடிகர் அஜித் குமாரிடம் மன்னிப்பு கேட்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கோபி வீடியோ கேமில் கார் ஓட்டுகிறார். அப்போது அவரால் ஒழுங்காக ஓட்ட முடியவில்லை. இதை பார்த்து அருகில் இருக்கும் சுதாகர், திவாக்கர் இருவரும் கோபியை கிண்டல் செய்கிறார்கள்.
அப்போது கோபி, “இந்த நேரத்தில் நான் அஜித் குமார் சாரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவர் கார் ஓட்டுவதை பார்த்து எத்தனையோ நாட்கள் வெறுப்பில் — ‘இவர் என்னப்பா அடிக்கடி ஓட்டி வண்டியை எங்கேயாவது இடித்துவிடுகிறார்!’ — என்று நினைத்திருக்கிறேன்.
எங்களால் ஸ்டிமுலேட்டரிலேயே எதுவும் செய்ய முடியவில்லை. நீங்கள் உண்மையான காரில் என்னென்னமோ செய்கிறீர்கள். உண்மையிலேயே மிகவும் சிரமமான, சவாலான விஷயம்,” என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கார் ரேசிங் பயிற்சி மற்றும் கார் ரேஸ் என இரண்டு முறைகளில் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. அப்போது அவரை பலரும் கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அதைச் சுட்டிக்காட்டித்தான் கோபி தற்போது பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








