நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் அவரின் பெயர் இடம் பெற்றதோடு போலீசார் விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டுருந்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் தற்போது தலைமறைவாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் தமிழ் மலையாள சினிமா ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வெளியான தகவல்களின் படி இந்த சம்பவம் ஒரு மதுபான பார் பகுதியில் தொடங்கியுள்ளது.
அங்கு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாய் தகராரில் ஒரு ஐடி ஊழியர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட அந்த ஐடி ஊழியர் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் மிதுன், அனிஷ் மற்றும் சோனா மோல் எனப்படும் மூவர் இந்த கடத்தல் குழுவில் இருந்ததாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த மூவரும் கைது செய்யப்பட்ட பிறகு விசாரணையின் போது நடிகை லட்சுமி மேனனுக்கும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை லட்சுமி மேனன் மீது நேரடியாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதா அல்லது அவர் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறாரா என்பதில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் போலீசார் அவரை விசாரணைக்காக அழைக்க முடிவு செய்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில்தான் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய அந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் தற்போது நடிகை லட்சுமி மேனனையும் தேடி வருகின்றனர். நடிகை லட்சுமி மேனன் தற்போது எங்கு இருக்கிறார்? நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறாரா? அல்லது சொந்த ஊரில் தங்கி இருக்கிறாரா என எந்த விதமான உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் போலீசார் தேடுதலையும் விசாரணை நடவடிக்கையையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக நடிகை லட்சுமி மேனன் தலைமறைவில் உள்ளார் என்று அறிவிக்கப்படவில்லை








