பீகாரில் உள்ள குழந்தைகளுக்கு கூட வாக்கு திருட்டு பற்றி தெரிந்துவிட்டது என்று கூறிய ராகுல் காந்தி வாக்குகளை திருடியவரே பதவியை விட்டு இறங்குங்க என்று முழக்கமிடுவதாக தெரிவித்துள்ளார்.
வாக்காளர் உரிமை நடைப்பெறும் இடத்தில் எட்டாவது நாளில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பைக் பேரணி சென்றனர்.
பீகார் மாநிலம் அராரியாவில் பைக் பேரணிக்கு பின்னர் செய்தியாளருடன் பேசிய ராகுல் காந்தி கடந்த இரண்டு யாத்திரைகளை போல அல்லாமல் தற்போதைய யாத்திரையில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றுள்ளதாகவும் பீகாரின் குழந்தைகள் இப்போது அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட தொடங்கிவிட்டனர் எனவும் தெரிவித்தார்.
பீகாரில் உள்ள குழந்தைகளுக்கு கூட வாக்கு திருட்டு பற்றி தெளிவாக தெரிந்துவிட்டது என்று கூறிய ராகுல் காந்தி வாக்குகளை திருடியவரே பதவியை விட்டு இறங்குங்க என்று குழந்தைகள் முழக்கவிடுவதாக தெரிவித்தார்.
ஆர்ஜேடியும் காங்கிரசும் கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணைந்துள்ளது என்றும் தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும். ஆனால் வாக்கு திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.








