டெல்லியில் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது.
கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
வெடி விபத்தில் ஊனமுற்றவர்களுக்கு 5 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் டெல்லி முதலமைச்சர் கூறியுள்ளார்.








