ஒரு 16 வயது சிறுவன் தனது சொந்த கம்பெனியின் முதலாளி. அவருடைய கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஒருவர் வேறு யாருமல்ல அவருடைய சொந்த தந்தை. நம்ப முடியவில்லையா? இது நிஜம்.
கேரளாவை சேர்ந்த ராகுல் ஜான் அஜு என்ற 16 வயது சிறுவன் ஏஐ(AI) மேதை இந்தியாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். யார் இந்த ராகுல் எப்படி ஒரு சிறுவனால் இது முடிந்தது?
கேரளாவின் இளைய ஏஐ மேதை என்று அழைக்கப்படும் ராகுல் ஆர்ம் டெக்னாலஜிஸ் என்று தனது சொந்த ஸ்டார்டப் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் இந்தியா டுடேமாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இவர் பேசிய பேச்சு இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. நம்மில் பலரும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அதாவது ஏஐ(AI) ஏதோ ஒரு பெரிய ராக்கெட் சயின்ஸ்ன்னு நினைச்சசிட்டு இருக்கோம். அது நம்ம வேலையை பறிச்சிடும் உலகத்தையே ஆட்டி படைக்கும் என்று பயந்துட்டு இருக்கோம்.
ஆனா அந்த 16 வயது மேதை என்ன சொன்னார் தெரியுமா? ஏஜ வெறும் போர் அடிக்கிற கணக்கும் டேட்டாவும் தான்னு ரொம்ப சிம்பிளா உடைச்சு போட்டாரு.
நாம தினமும் பயன்படுத்துற தேடு பொறிகள் நமக்குல வர வீடியோ பரிந்துரைகள் எல்லாமே ஏஜ தான். அடுத்தது என்ன நடக்கும்னு கணிக்கிற ஒரு கருவிதான் ஏஜ விளக்கினார் ராகுல்.
அதை பார்த்து பயப்பட தேவையில்லை. அதை எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கணும்னுதான் யோசிக்கணும் அப்படின்னு சொல்றாரு. அவர் சொன்ன அந்த ஒரு விஷயம்தான் இப்போ எல்லோரையும் ஒழுக்கி எடுத்திருக்கு.
ஏஐ உங்களை மாற்றாது. ஆனா ஏஐ பயன்படுத்தும் ஒருவர் உங்களை நிச்சயம் மாற்றுவார் என்ற எச்சரிக்கை வரப்போகும் காலத்தின் நிதர்சனமான உண்மை. ஒரு காலத்துல நம்ம எல்லார் கையிலயும் இருந்த நோக்கிய போன் நினைவருக்கிறதா? புது டெக்னாலஜிக்கு மாறுததுனால மொத்தமா காணாம போச்சு.
அதே நிலைமைதான் ஏஐ விஷயத்திலயும் வரும்னு அவர் எச்சரிக்கிறார். யார் இந்த புதிய தொழில்நுட்பத்தை கத்துக்கிட்டு பயன்படுத்துறாங்களோ அவங்க ஜெயிப்பாங்க. தயங்கி நிக்கிறவங்க பின்தங்கிடுவாங்க. பேசுறது மட்டுமல்ல அவர் செஞ்சும் காட்டி இருக்கார்.
ஆறு வயசுல இருந்தே ஏஐ பற்றி படிக்க ஆரம்பிச்ச ரவுள். எனக்கு 10க்கும் மேற்பட்ட ஏஐ கருவிகளை உருவாக்கி இருக்கார். அவர் பேசின அந்த பிரசென்டேஷனே ஏஐ உதவியோடுதான் உருவாக்கப்பட்டதான். ஏன் தன்னுடைய குரலிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கிற மீ பாட்டி என்ற ஒரு ரோபோவையும் உருவாக்கி இருக்கார்.
இந்த சின்ன வயசுல இவ்வளவு செஞ்ச ராகுல் இந்தியாவுக்காக ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைக்கிறார். உலகம் நடத்தும் தொழில்நுட்ப பந்தயத்தில் நாமும் ஒரு போட்டியாளராக பங்கேற்பதை விட இந்தியா தனக்கென ஒரு புதிய தொழில்நுட்ப பந்தயத்தையே உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியது.
பல அனுபவமிக்க தலைவர்களையே ஆச்சரியப்பட வைத்தது. மலேசியாவை போல வெறும் உற்பத்தி மட்டும் செய்யாமல் தென்கொரியாவை போல உற்பத்தியையும் புதுமையையும் இணைத்து நாம் முன்னேற வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.
அதற்கு என்ன வழி? நாம் மதிப்பெண்களையும் பட்டங்களையும் துரத்துவதை நிறுத்துவிட்டு திறன்களையும் படைப்பாற்றலையும் துரத்த வேண்டும் என்று ராகுல் அழுத்தமாக வலியுறுத்துகிறார்.
தற்போது இவர் கேரளா மற்றும் துபாய் அரசாங்கங்களுடன் இணைந்து ப்ராஜெக்ட் ஜஸ்டிசி என்ற திட்டத்திலும் பணியாற்று வருகிறார். இதன் மூலம் அவசர காலங்களில் பொதுமக்களுக்கு சட்ட உதவிகளை இளமையாக்கும் கதவிகளை உருவாக்கி வருகிறார்.
அரசியல் தலைவர்கள் முதல் தொழில் முனைவோர் வரை அனைவரும் வியந்து பார்க்கும் ராகுல் ஜான் அஜு வெறும் ஆரம்பம்தான் என்கிறார்
. நான் வளர முடிந்தால் யாரு வேண்டுமானாலும் வளர முடியும் என்பதுதான் அவருடைய தாரக மந்திரம்.இந்த இளம் வயதில் இவ்வளவு தெளிவான பார்வையுடன் இருக்கும் ராகுல் ஜான் அஜு நிச்சயம் வருங்கால இந்தியாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.








