Home இந்தியா “வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லைனா கவலை வேண்டாம் – உடனே செய்ய வேண்டியது இதுதான்!”

“வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லைனா கவலை வேண்டாம் – உடனே செய்ய வேண்டியது இதுதான்!”

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் விடுபட்ட தகுதியான வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்? புதிதாக பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in இணைதளம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணைதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணைதளங்கள் மூலம் அறியலாம். அதாவது இறந்தவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் கொண்டவர்கள் ஆகியோரின் விவரங்களை இதில் காண முடியும்.

பெயர் நீக்கப்பட்டவர்கள் அல்லது புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்களது பிஎல்ஓ (BLO) விடம் வழங்கலாம் அல்லது தேர்தல் ஆணையத்தின் இணைதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்கள் முகவரி மாற்றம் செய்யவும், தொகுதி மாற்றம் செய்யவும் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.