குஜராத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
புதிய பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. சம்பவ நேரத்தில் 105 பேர் பணியாற்றி வந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒளரங்கா ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டு வரும் இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தூண்களை இணைக்கும் அமைப்பில் ஏற்பட்ட சேதம் காரணமாகவே பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்த சம்பவம் குஜராத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.








