Home இந்தியா “பறந்து போன கார்… இறங்கிய இடம் ஷோரூம் தரை!

“பறந்து போன கார்… இறங்கிய இடம் ஷோரூம் தரை!

டெல்லி லட்சுமி நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் டெஸ்ட் டிரைவின் போது முதல் தளத்திலிருந்து ஷோரூம் கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு கீழே விழுந்துள்ளது.

புதிதாக வாங்கிய சொகுசு காரை டெஸ்ட் டிரைவுக்காக இயக்கிய போது தவறாக ஆக்சலரேட்டரை இயக்கியதால் ஷோரூமின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு கார் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி லஷ்மி நகர் பகுதியில் மஹேந்திரா கார் ஷோரூம் அமைந்திருக்கிறது. இந்த ஷோரூமில் பெண் ஒருவர் சுமார் 27 லட்சம் ரூபாய் கொடுத்து எஸ்யூவி சொகுசு வாகனத்தை வாங்கி இருக்கிறார்.

காரை வாங்கியதும் காருக்கடியில் எலுமிச்சம் பழம் மிளகாயை வைத்து பூஜை செய்வதற்காக அந்த டயருக்கடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து டெஸ்ட் டிரைவுக்காக காரை இயக்கி இருக்கிறார்.

அப்போது ஆக்சிலேட்டரை வலுவாக அந்த பெண் இயக்கியதால் கார் பின்னால் நகர்ந்து ஷோரூமினுடைய முதல் தளத்தில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து சேதமடைந்திருக்கிறது.

இந்த டெஸ்ட் டிரைவின் போது அந்த குழந்தை அந்த காரினுடைய உரிமையாளரும், கார் ஷோரூமினுடைய அந்த பணியாளரும் காருக்குள்ளே அமர்ந்திருந்தனர்.

இந்த கார் கீழே விழுந்த வேகத்தில் கார் பலத்த சேதமடைந்து கார்னுடைய கண்ணாடி ஜன்னல் அனைத்தும் நொறுங்கி சேதமடைந்திருக்கிறது.

15 அடி உயரத்திலிருந்து கார் கீழே விழுந்தாலும் கூட காரில் பொருத்தப்பட்டிருந்த ஏர் பேக்கின் காரணமாக அந்தப் பெண் எந்தவிதமான காயமும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார். இருந்தாலும் சிறிய அளவில் அந்த பெண்ணுக்கு உள்காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியிலே ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கார் ஷோரூமும் சேதமடைந்தது புதிதாக வாங்கிய 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரும் சேதமடைந்தது. இருப்பினும் அதில் பொருத்தப்பட்டிருந்த ஏர் பேக்கின் காரணமாக பெண் சிறிய உள்காயங்களுடன் அவர் உயிர் தப்பி இருக்கிறார்.