Home இந்தியா உங்கள் பெயரிலும் வங்கியில் கோடிகள் இருக்கலாம்! செக் பண்ணுங்க!

உங்கள் பெயரிலும் வங்கியில் கோடிகள் இருக்கலாம்! செக் பண்ணுங்க!

உரிமை கோரப்படாமல் முடங்கி கிடக்கும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிதியை மீட்டு உரியவர்களிடம் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்டவற்றில் சுமார் ஒரு இலட்சத்துநாயிரம் கோடி ரூபாய் நிதி உரிமை கோரப்படாமல் முடங்கி கிடப்பதாக அவர் கூறினார். டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் சம்மிட் நிகழ்ச்சியில் பேசிய அவர்,

78,000 கோடி ரூபாய் வங்கி கணக்குகளில், 14,000 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களில், 9,000 கோடி ரூபாய் செலுத்தப்படாத ஈவுத்தொகைகளில், 3,000 கோடி ரூபாய் மியூச்சுவல் ஃபண்டுகளில் உரிமை கோரப்படாமல் இருப்பதாகவும், இந்தப் பணம் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு சேர்ந்ததுதானென்றும் தெரிவித்தார்.

உரிமை கோரப்படாத இந்த நிதியை உரியவர்களிடம் சேர்க்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

ரிசர்வ் வங்கி விதிகளின் படி, 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகளில் உள்ள பணம் ‘ரிசர்வ் வங்கி முதலீட்டாளர் விழிப்புணர்வு நிதிக்கு’ மாற்றப்படுகிறது. இந்த நிதியில் சேகரிக்கப்பட்ட தொகையிலிருந்தே வாடிக்கையாளர்கள் பின்னர் உரிய ஆவணங்களை வழங்கி தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

ரிசர்வ் வங்கி ‘உத்காம்’ என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 90%-க்கும் அதிகமான உரிமை கோரப்படாத தொகைகளை ஒரே இடத்தில் தேட உதவுகிறது.

2025 ஜூன் நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் 5,830 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத வகுப்பு தொகைகள் உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 9,330 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத வைப்பு தொகையுடன் முதலிடத்தில் உள்ளது.

மத்திய அரசின் முயற்சிகளின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 10,297 கோடி ரூபாய், அதற்குரிய 33 லட்சம் பேரிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.