டெல்லியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழுந்தனர். சத்பவனா பூங்கா அருகில் மூன்று மாடி கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடத்தில் சிறப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் ஜுபை, குல்சாக் மற்றும் தவபிக் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் முதலிட்ட குடிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








