குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஏழு வயது சிறுவனின் வயிற்றில் இருந்து கொத்து கொத்தாக முடி புற்கள் மற்றும் ஷூலேஸ் ஆகியவற்றை மருத்துவர்கள் அகற்றினர்.
சுபம் நிமானா என்ற அந்த சிறுவன் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலி வாந்தி மற்றும் உடல் எடை குறைவு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தார்.
சிடி ஸ்கேன் மூலம் சிறுவனின் வயிற்றில் கொத்து கொத்தாக முடி நூல் இருப்பது தெரிய வந்ததை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை மருத்துவர்கள் அகற்றினர்.
தற்போது சிறுவன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.








